இங்­கி­லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.    

அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்­பெ­ற­வில்லை. அதே போல் காய­ம­டைந்த வெர்னன் பிலாண்­ட­ருக்கும் அணியில் இட­மில்லை. 

ஆனால் வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னி மோர்கெல், சுழற்­பந்து வீச்­சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர். ஏ.பி.டிவில்­லியர்ஸ் தலை வராக நீடிக்கிறார்.

சகலதுறை ஆட்டக்காரர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் அண்டைல் பெலுக்­வயோ, பிரி­டோ­ரியஸ் ஆகியோர் அணியில் உள்­ளனர். ரபடாவும் அணியில் இடம்­பெற்­றுள்ளார். 

தென்னா­பி­ரிக்க அணி

ஏ.பி.டிவில்­லியர்ஸ் (தலைவர்), அம்லா, டி கொக், டுபி­ளெசிஸ், டுமினி, மில்லர், பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், அண்டைல் பெலுக்­வயோ, ரபாடா, தாஹிர், பிரி­டோ­ரியஸ், மஹராஜ், மோர்னி மோர் கெல்.

இந்நிலை யில் சம்­பியன்ஸ் கிண்ணத் திற்கான அவுஸ்­தி­ரே­லிய அணியில் முன்­னணி சகலதுறை ஆட் டக் கா ரரான பௌக்­னெ­ருக்கு இடம் கிடைக்­க­வில்லை. ஸ்டார்க், லின் ஆகியோர் இடம்­பி­டித்­துள்­ளனர்.

15 பேர் கொண்ட அவுஸ்­தி­ரே­லிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்­திய டெஸ்ட் தொட­ரின்­போது காயத்தால் வில­கிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து வில­கிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

அதேபோல் ஷோன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸகொம்ப், ஜோர்ஜ் பெய்லி போன்­றோ­ருக்கும் இடம் கிடைக்­க­வில்லை.

ஆஸி. அணி 

ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), வோர்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், மேத்யூ வடே, கிறிஸ் லின், ஹென்றிக்ஸ், கம்மின்ஸ், ஹாஸ்டிங்ஸ், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.