நினைவிழந்த நிலையில் பிரசவித்த குழந்தையை 4 மாதங்களுக்குப் பின் சந்தித்த தாய்

Published By: Devika

21 Apr, 2017 | 09:52 AM
image

கோமா நிலையிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்ணொருவர், நான்கு மாதங்களுக்குப் பின் முதன்முதலாகக் குழந்தையைச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களான அமெலியா பன்னான் (34) மற்றும் அவரது கணவர் உட்பட நண்பர்கள் சிலர் கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி விபத்தொன்றில் சிக்குண்டனர். ஏனையவர்கள் பிழைத்துக்கொண்டனர். கர்ப்பிணியாக இருந்த அமெலியாவுக்கு மூளையில் கடும் சிதைவு ஏற்பட்டது. இதனால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார் அமெலியா.

என்றபோதும், மருத்துவர்களின் முயற்சியால் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று அமெலியாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

விபத்தில் மூளை கடுமையாகச் சிதைவடைந்திருந்ததால் அமெலியா மீண்டும் நினைவுதிரும்புவது சந்தேகமே என்று மருத்துவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், கடந்த வியாழனன்று (பெரிய வியாழன்) அமெலியாவுக்கு நினைவு திரும்பியது.

இதையடுத்து, தான் பிரசவித்த குழந்தையை நான்கு மாதங்கள் கழித்து முதன்முறையாக அமெலியா சந்தித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

அமெலியாவுக்கு நினைவு திரும்பியமை மருத்துவத்துறையில் ஒரு அற்புத நிகழ்வே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right