தப்பினார் நவாஸ் ஷெரீப்; கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த மீயுயர் நீதிமன்றம் உத்தரவு

Published By: Devika

20 Apr, 2017 | 03:40 PM
image

பனமா ஆவணங்கள் மூலம் வெளியான ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது உறவினர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என ஆராய கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறும், இரண்டு மாதங்களுக்குள் போதுமான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பாகிஸ்தான் மீயுயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தக் குழுவின் முன் ஆஜராகுமாறும் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது இரு புதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய பிரமுகர்கள் பலரினது ஊழல் தொடர்புகளை வெளிப்படுத்திய பனாமா ஆவணங்களில் நவாஸ் ஷெரிபீன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் மீது நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என இம்ரான் கான் உள்ளிட்ட பலர் வழக்கு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி நவாஸ் ஷெரீப் மீதான வழக்குகள் ஆரம்பமாயின. மொத்தமாக 35 முறை இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவார் என்றும் இதனால் அவர் உடனடியாகப் பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதியளித்துள்ளது.

எனினும், பல்வேறு முகவர் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு ஒன்றை அமைத்து, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவர் மீதான விசாரணைகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வினால் வழங்கப்பட்ட 540 பக்கங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பில், இரண்டு நீதிபதிகள் ஷெரீபை பதவி விலக்குவதாகவும், மூவர் மேலதிக விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34