பமுனுகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை வீரர்கள் மற்றும் பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1.2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.