ஒபாமாவின் மகளைத் திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞனை இரகசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா (18). இவர் நியூயோர்க்  மென்ஹெட்டன் பகுதியில் கல்வி கற்று வருகிறார்.

இந்நிலையில், மலியாவை ஜெய்ர் நில்ட்டன் கர்டோஸோ (30) என்பவர் கடந்த சில நாட்களாகப் பின் தொடர்ந்திருக்கிறார். கடந்த பத்தாம் திகதி மலியாவின் கல்வியகத்துக்கே சென்ற இவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பலமாகக் கத்தியிருக்கிறார்.

இதைக் கேட்ட மலியாவின் பாதுகாவலர்கள் ஜெய்ரை அங்கிருந்து செல்லுமாறும், மீண்டும் மலியாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

இதை லட்சியம் செய்யாத ஜெய்ர், நேற்று (19) மீண்டும் மலியாவைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அப்போது அவரைச் சுற்றிவளைத்த இரகசிய பொலிஸார் அவரைத் தடுத்து வைத்தனர்.

விசாரணையின்போது, ஒபாமாவின் பதவிக் காலத்திலேயே மலியாவைப் பார்ப்பதற்காக பல முறை வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் ஜெய்ர் என்று தெரியவந்துள்ளது.