கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில்  குப்பைமேடு சரிந்ததில் அதில் அகப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு இன்று (20) வவுனியா மில் வீதியிலுள்ள புளியடி விநாயகர் ஆலயத்தில் காலை 8.30 மணியளவில் ஆத்மாசாந்தி பூஜை வழிபாடு அறங்காவலர் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்  எஸ். ஏஸ. வாசன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆத்மா சாந்திப்பிரார்த்தனையில் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தீப அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.