(ரொபட் அன்­டனி)

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு இன்று வர­வி­ருந்த  பிரிட்­டனின் ஆசிய பசுபிக்  வெளிவி­வ­கார  பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர்  அலோக் சர்மா  தனது விஜ­யத்தை  திடீ­ரென ரத்துச் செய்­துள்ளார். 

பிரிட்டன் பிர­தமர் தெரேஸா மே  எதிர்­வரும் ஜூன் எட்டாம் திகதி பொதுத் தேர் தல் நடத்­தப்­படும் என  வெளியிட்ட அறி­விப்பை அடுத்தே   அலோக் சர்மா இலங்­கைக்­கான விஜ­யத்தை ரத்துச் செய்­துள்ளார். 

இந்த விஜ­யத்­தின்­போது பிரிட்­டனின் ஆசிய பசுபிக்  வெளிவி­வ­கார  பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர்  அலோக் சர்மா ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க,  வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட  தரப்­பி­ன­ரையும் எதிர்க்­கட்சித் தலைவர்  சம்­பந்தன் தலை­மை­யி­லான  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­து­வ­தற்கு  ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.

அத்­துடன் யாழ்ப்­பா­ணத்­துக்கும் பிரிட்டன் அமைச்சர்      அலோக் சர்மா  விஜயம் செய்­ய­வி­ருந்­த­துடன் அங்கு  பல்­வேறு  தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. 

இது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூத­ரகம் விடுத்­துள்ள அறிக்­கையில்  பிரிட்­டனின் ஆசிய பசுபிக்  வெளி 

வி­வ­கார  பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர்  அலோக் சர்­மாவின்  இலங்கை விஜயம் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது.  பிரிட்டன் பிர­தமர் தெரேஸா மே  எதிர்­வரும் ஜூன் எட்டாம் திகதி  பொதுத் தேர்தல் நடத்­தப்­படும்  என அறிவித்துள்ளதையடுத்தே இந்த விஜயத்தை  அமைச்சர் அலோக் சர்மா ரத்துச் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.