கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.


முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும்  டாஸ் நிறுவனத்தினரால் நேற்று புதன்கிழமை   இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.


பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் முழுமையாக காணப்படவில்லை என்பதுடன் குறித்த துப்பாக்கிகள் அனைத்தும் பளை பொலிஸாரிடம் குறித்த நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.