(எம்.எப்.எம்.பஸீர்)

பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கையடக்கத் தொலைபேசிகளை மொத்தமாக கொள்வனவுச் செய்து, அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலைகளை விலையாக செலுத்திய இளம் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இலக்கம் 141, பண்டாரநாயக்க புர. மல்கடுவாவ குருணாகல் மற்றும் 2 ? ஏ 12, பிக்சிட்டி பில்வத்த யடியன ஆகிய முகவரிகளைக் கொண்ட 26 வயதான மு{ஹது கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி எனும் யுவதியையே இவ்வாறு தேடப்படுவதாகவும் அவர் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் இவ்வாறு மறுக்கப்பட்ட காசோலைகளை வழங்கி  32 இலட்சத்து 64 ஆயிரத்து  740 ரூபாவை குறித்த யுவதி மோசடி செய்துள்ளதாகவும் இது தொடர்பில் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றின் வழக்குகளுக்கு அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சந்தேக நபரின் புகைப்படத்துடன் நேற்று ஊடகங்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

915502717 v எனும் அடையாள அட்டை இலக்கம், என். 5627745 எனும் கடவுச் சீட்டையும் உடைய 1991.02.19 ஆம் திகதி பிறந்த குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தோர்  077 - 3890959 அல்லது 077 - 3741661 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.