ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியின் வங்கியகும்புர கந்தே புஹுல்பொல சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்ர்டார் சைக்கிள் விபத்தொன்றில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரலாந்தை நகரிலிருந்து கெப்பெடிபொல நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று வங்கியகும்புர சந்தியில் வீதியை நோக்கி செலுத்திய முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளில் பயணித்த 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொரலாந்தை கந்தேபுஹுல்பொல பகுதியை சேர்ந்த எச்.எம்.ரொமேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொரலாந்தை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.