(க.கமலநாதன்)

மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவிற்கு பிரதான காரணம் தற்போதைய அரசாங்கத்தின் அசமந்த போக்காகும். எனவே மீதொட்டமுல்லையில் இடம்பெற்றது மனித படுகொலை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேற்படி விவகாரத்தில் கடந்த அரசாங்கத்தை குறை கூறுபவர்கள் அந்த அரசாங்கத்திலேயே  இருந்த முக்கியஸ்தர்கள் என்பது விதிக்கொடுமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நூலகத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.