3 மாத குழந்தைக்கு தீவிரவாத விசாரணை அழைப்பாணை..! 

Published By: Selva Loges

18 Apr, 2017 | 04:05 PM
image

விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை  தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். அவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

குறித்த சுற்றுலாப்பயணத்திற்காக 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ்க்கு விசா பெறப்பட்டுள்ளது. குறித்த விசாவை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு பார்த்தல், அழிவுவேலையில் ஈடுபடுதல் மற்றும் இனப்படுகொலை போன்றவைகளில் ஈடுபட்டவரா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு குறித்த குழந்தையின் தாத்தா தவறுதலாக ஆம் என்று தெரிவுசெய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விசா படிவத்திலுள்ள தகவல்களை பரிசீலனை செய்துள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், இன்னும் வாய்பேச துவங்காத ஹார்வியை, விசாரணை செய்வதற்காக தூதரக அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பாணை விடுத்துள்ளனர். இந்நிலையில் குறித்த விசாரணைக்காக 10 மணி நேர விமான பயணத்தை மேற்கொண்டு ஹார்வியின் குடும்பத்தினர் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right