காணி விடுவிப்பு குறித்து ஆராய நேரடி விஜயம்

Published By: Robert

18 Apr, 2017 | 11:06 AM
image

(ஆர்.ராம்)

Image result for காணி விடுவிப்பு virakesari

வடக்கில் படைத்­த­ரப்­பி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்­காக மாவட்ட ரீதி­யாக மக்கள் பிர­தி­நி­திகள், இரா­ணுவ அதி­கா­ரிகள், அந்­தந்த மாவட்ட அர­சாங்க அதி­பர்கள் கூட்­டாக அப்­ப­கு­தி­க­ளுக்கு நேரில் விஜயம் செய்து அவற்றை விடு­விப்­பது குறித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வ­தென தமிழ்த் தேசியக் கூட­ட­மைப்­பிற்கும் பாது­காப்­புத்­த­ரப்­பிற்கும் இடையில் நடை­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­பி­ர­காரம் எதிர்­வரும் 19ஆம் திகதி முல்­லைத்­தீ­விலும், 20ஆம் திகதி காலை யாழ்ப்­பா­ணத்­திலும், மலையில் கிளி­நொச்­சி­யிலும் இச்­செ­யற்­பாடு நடை­பெ­ற­வுள்­ளது.

கேப்­பா­பு­லவில் மக்­க­ளின காணி­களை மீள கைய­ளிப்­ப­தற்கு படைத்­த­ரப்பு தயா­ரக இருக்­கின்ற அதே­நேரம் மாற்று இடத்­திற்கு செல்­வ­தற்­காக சிறிது கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறும் அத்­த­ரப்­பி­னரால் கோரப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் பாலாலி விமான நிலைய விஸ்­த­ரிப்­புக்­காக காணிகள் தேவைப்­ப­டு­மாயின் அக்­கோ­ரிக்­கையை பரி­சீ­லனை செய்ய தயா­ராக இருப்­ப­தாக அறி­வித்­துள்ள கூட்­ட­மைப்பு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி விவ­கா­ரத்­திற்கு விரைவில் முடிவு கட்­டப்­படும் எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் பாது­காப்புத் தரப்பின் உயர்­மட்­டக ்குழுவி­ன­ருக்கும் இடையில் வடக்கு கிழக்கில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணிகளை பொது­மக்­க­ளி­டத்தில் மீளக்­கை­ய­ளித்தல் தொடர்பிலான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் 11மணிக்கு பாது­காப்புச் செய­லா­ள­ரு­டைய அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா, யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­தரன், எம்.ஏ.சுமந்­திரன், ஈ.சர­வ­ண­பவன் ஆகி­யோரும்  வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆகி­யோரும் தேசி­யப்­பட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு­மதி சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜாவும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

பாது­காப்பு தரப்பில் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி, இரா­ணு­வத்­த­ள­பதி கிஷாந்த டி சில்வா உட்­பட இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­ப­டை­களின் உயர்­மட்ட அதி­க­ரிகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

இச்­சந்­திப்பு குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வௌியிட்ட எதிர்க்­கட்­சித்­த­லை­வரும்  கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்  கருத்துத் தெரிவிக்கையில்

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு

நானும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும் கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து வடக்கில் நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் காணிப்­பி­ரச்­சி­னைகள் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். 

அத்­தோடு காணி­களை விடு­விக்க கோரி மக்கள் தொடர்ச்­சி­யாக நடத்தி வரும் போராட்­டங்கள் , காணி­களை விரைவில் விடுக்­க­வேண்­டிய தேவை குறித்தும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். 

காணி­களை வைத்­தி­ருக்க தற்­போது என்ன தேவை­யுள்­ளது

அதன் தொடர்ச்­சி­யாக இன்­றைய தினம்(நேற்று) பாது­காப்புச் செய­வாளர் இரா­ணு­வத்­த­ள­பதி மற்றும் முப்­ப­டை­களின் உயர்­அ­தி­கா­ரிகள் ஆகி­யோ­ருடன் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தோம். இதன்­போதும் அதே விட­யங்­களை நாம் வலி­யு­றுத்­தினோம். குறிப்­பாக யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளி­டத்தில் ஆய­தங்கள் இருந்­தன. அவற்றைப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வ­த­ளங்கள் தாக்­கப்­ப­டலாம் என்­பதன் நிமித்தம் அதி­உயர் பாது­காப்பு வல­யங்கள் அமைக்­கப்­பட்­டன. 

தற்­போது யுத்தம் நிறை­வுக்கு வந்து விட்­டது. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களும் இல்லை. அவர்­களின் ஆயு­தங்­களும் இல்லை. அதே­நேரம் யுத்தம் நடை­பெற்ற போது விடு­த­லைப்­பு­லிகள் வச­மி­ருந்த காணிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவற்றை விடவும் மேலும் காணிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான காணிகள் மக்கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணிகள். மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள். சில காணிகள் அர­சாங்­கத்தின் காணிப்­பத்­திரம் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட காணிகள். அவற்றை மக்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிப்­பது உங்­களின் கடமை.  

அந்த காணி­களில் அவர்கள் வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். அந்த உரி­மையை மறுப்­பது தவ­றா­னது. ஆகவே அக்­க­ணி­களை மீளவும் மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டத்தில் வலி­யு­றுத்­தினோம். 

முடி­வெ­டுக்கும் அதி­காரம் எம்­மி­டத்தில் இல்லை

அதற்­குப்­ப­தி­ல­ளித்த இரா­ணு­வத்­த­ள­பதி, நாங்கள் பலத்­கா­ர­மாக எந்­த­வி­த­மான காணி­க­ளையும் வைத்­தி­ருக்க கூடிய அதி­காரம் இல்லை. காணிகள் விடு­விப்பு குறித்து முடி­வெ­டுக்க வேண்­டி­யது சிவில் அதி­கா­ரத்­தினை கொண்­டி­ருப்­ப­வர்­க­ளாவர். 

ஜனா­தி­ப­தியும் , பாது­காப்புச் செய­லா­ளரும் காணி­களை விடு­விக்கச் சொன்னால் அதனை விடு­விக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அத­னை­மீறி நாம காணி­களை வைத்­தி­ருப்­ப­தற்கு அதி­கா­ர­மில்லை. அவர்கள் கட்­ட­ளை­யிட்டால் காணி­களை விடு­விப்­ப­தற்கு தயா­ரா­க­வுள்ளோம் என்றார்.

மக்கள் பிர­தி­நி­தி­களின் வலி­யு­றுத்து

அதற்குப் பின்னர் தற்­போது வடக்கில் முல்­லைத்­தீவில் கேப்­பா­பு­லவு, மன்­னாரில் முள்­ளிக்­குளம், கிளி­நொச்­சியில் நடை­பெற்று வரும் போராட்­டங்கள் மற்றும் வலி­காமம் வடக்கு ஆகிய பகு­தி­களில் காணப்­படும் காணி விவ­கா­ரங்கள் தொடர்­பா­கவும் மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பா­கவும் விரி­வாக அதி­கா­ரி­க­ளி­டத்திர் குறிப்­பிட்டோம்.  எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மக்­களின் கோரிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். 

கேப்­பா­பு­லவு விவ­கா­ரமும் கால அவ­கா­சமும்

கேப்­பா­பு­லவில் ஒரு தொகுதி காணி­களை கைய­ளிப்­ப­தற்கு இரா­ணு­வத்­தினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­கின்­றது. ஆனால் முக்­கி­ய­மாக இரா­ணுவ தளம்  அமைந்­தி­ருக்­கின்ற பிர­தே­சத்தில் அவர்­க­ளுக்­கான முகாம் மற்றும் ஏனைய வச­திகள் அவர்­க­ளுக்கு உள்­ள­தாக அறி­கின்றோம். இருப்­பினும் அந்தக் காணிகள் தமக்கு சொந்­த­மான காணிகள். தனிப்­பட்ட முறையில் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணிகள். ஆகவே அவற்றில் மீண்டும் குடி­யேற வேண்டும் என்ற கோரிக்­கையை மக்கள் முன்­வைக்­கின்­றார்கள். 

இவ்­வா­றான நிலையில் இரா­ணு­வத்­தினர் அக்­கா­ணியில் இருந்து வில­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ளனர். இருப்­பினும் தமக்கு கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது. தமது இரா­ணுவ தளத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு தேவை­யான பணத்தைப் பெற்று மாற்­றி­டத்­திற்குச் செல்­வ­தற்கு காலம் அவ­சி­ய­மா­க­வுள்­ள­தாக கூறி­யுள்­ளார்கள். 

மாவட்ட ரீதி­யாக கூட்­டங்கள்

இந்த விடயம் சம்­பந்­த­மாக அங்­குள்ள இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக  எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­மோகன், சாந்­தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, எம்,ஏ.சுமந்­திரன் ஆகிய மூவரும் எதிர்­வரும் 19ஆம் திகதி அங்கே பிரச்­சன்­ன­மா­க­வுள்­ளனர். 

அத்­துடன்  முல்­லை­தீவு அர­சாங்க அதிபர். இரா­ணுவ அதி­க­ரிகள், மக்கள் பிர­தி­நி­திகள் ஆகியோர் இரா­ணு­வத்­தளம் உள்ள பகு­திக்குள் சென்று அந்த பகு­தியை பார்­வை­யிட்டு அவற்றை எவ்­வாறு மீள விடு­விக்­கலாம் என்­பது குறித்து முடி­வுகள் எடுக்­க­வுள்­ளனர். 

வலி­காமம் வடக்­கினைப் பொறுத்­த­வ­ரையில் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் ஏறத்­தாழ 4500ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­டாது இருக்­கின்­றது. அத­னைத்­த­விர 750ஏக்கர் காணிகள் யாழ்­மா­வட்­டத்தில் ஏனை­ய­ப­கு­திகளில் விடு­விக்­கப்­ப­டா­துள்­ளன. அவற்­றையும் விடு­விக்க வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்­தினோம். 

அதன்­போது கணி­ச­மான காணி­களை விடு­வித்­தி­ருக்­கின்றோம். ஏறத்­தாள வலி­கா­மத்தில் மாத்­திரம் 2800ஏக்­க­ருக்கும் அதி­க­மான காணி­களை விடு­வித்­தி­ருக்­கின்றோம். மேலும் காணி­களை விடு­விப்­ப­தற்கு முயற்­சிகள் நடை­பெற்று வரு­கின்­றன. 

அதன் பிர­காரம் அச்­செ­யற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் எம்,ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரிகள், யாழ்­மா­வட்ட அர­சாங்க அதிபர் ஆகி­யோ­ர் எதிர்­வரும் 20ஆம் திகதி காலை குறித்த பகு­தி­களை நேர­டி­யாக பார்­வை­யி­டு­வ­தோடு எந்­தெந்த காணி­களை விடு­விப்­பது என்­பது குறித்த கலந்­து­ரை­யா­டப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அவ்­வி­த­மா­கவே கிளி­நொச்­சி­யிலும் காணி­களை மீளவும் விடு­விப்­பது குறித்து கிளி­நொச்சி மாவட்ட அர­சாங்க அதிபர், பாரர்­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன், எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட ஏனைய உறுப்­பி­னர்கள், இரா­ணுவ அதி­கா­ரிகள் ஆகி­யோரை உள்­ள­டக்கி 20ஆம் திகதி மாலை கூட்டம் நடை­பெற்ற தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

மன்னார் முள்­ளிக்­குளம் காணி விவ­காரம் குறித்து இவ்­வி­த­மாக அர­சாங்க அதிபர், மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கூட்டம் நடை­பெற்று முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. வுவ­னி­யா­விலும் இவ்­வி­த­மாக காணப்­படும் பிரச்­சி­னைகள் குறித்து கூட்­ட­மொன்­று­ந­டை­பெற்று தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.  குறித்த இரண்டு மாவட்­டங்­களில் நடை­பெறும் கூட்­டங்­க­ளுக்­கான திக­திகள் இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. 

மீண்டும் கலந்­து­ரை­யாடல்

இவ்­வி­த­மான கூட்­டங்கள் நடை­பெற்று தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டதன் பின்னர் நாங்கள் மீண்டும் பாது­காப்புச் செய­லாளர் அலு­வ­ல­கத்தில் கூட­வுள்ளோம். அதன்­போது வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்­டங்­களில் காணப்­படும் காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பான முழ­மை­யான பட்­டி­யலைத் தயா­ரிக்­க­வுள்ளோம். குறித்த கூட்­டத்­திற்கு அர­சாங்க அதி­பர்­க­ளையும் அழைத்து நாம் கலந்­தா­லே­சித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள முடியும் என தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். 

ஜனா­தி­பதி மீதான எதிர்­பார்ப்பு

ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரைக்­க­மை­யவே இன்றை(நேற்று) சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்­தது. ஆகவே காணி­வி­வ­காரம் தொடர்பில் அவரின் முழுமை­யான ஒத்­து­ழைப்­புக்கள் எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்­பார்க்­கின்றோம்.

பலாலி விமான நிலைய காணித்­தேவை சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு தயார்

காணிப்­பி­ரச்­சினை என்­பது மிகவும் சிக்­க­லா­ன­தொன்­றாகும். ஏமது மக்கள் இரு­பத்­தைந்து முப்­பது வரு­டங்­க­ளாக தமது காணி­க­ளுக்குச் செல்­ல­மு­டி­யாது தவிக்­கின்­றார்கள். இந்த நிலைமை தொட­ர­மு­டி­யாது. உதாரணமாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விமானநிலையத்தை அமைப்பதற்கு காணிகள் தேவைப்படுமாகவிருந்தால் அதனை பரிசீலிப்பதற்கு தயாரக இருக்கின்றோம். 

அக்காரணத்தின் நிமித்தம் ஏனைய காணிகள் விடுவிக்கப்படுவது தமாதப்பட வேண்டிய அவசியமில்லை அதனை நாம் வலியுறுத்தியுள்ளோம். இன்று இந்த விடயத்தை ஆரம்பித்திருக்கின்றோம். விரைவில் இவ்விடயத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம். 

அடுத்த தடவை கிழக்கு காணி பிரச்சினைகள்

கிழக்கு மாகாணத்திலும் இவ்விதமான காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பாக அடுத்த தடவை சந்திப்பு நடைபெறுகின்ற போது அதிக கவனம் செலுத்தவுள்ளோம் அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவ்விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளோம்.

வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்தும் விரைவில் பேச்சு 

சமீபத்தில் நாங்கள் அறிந்த வரையில் மக்கள் குடிபெயர்ந்த காணிகள் மாத்திரம் அல்ல  பல்வேறு காணிகளும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வன பகுதியாக பிரகடனம் செய்யும் நிலைமைகள் காணப்படுகின்றன. அது சற்று வேறுபட்ட பிரச்சினையொன்றாகும். வனஇலக்கா மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினாலும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.  அவ்விடயம் சம்பந்தமாக நிச்சமாக நாம் பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47