சாய்ந்தமருது ஓஸ்மானியன் விளையாட்டுக்கழகத்திற்கான புதிய சீருடை அறிமுக விழா அண்மையில்  சாய்ந்தமருது சீபிரிஸ் ஹோட்டலில் கழகத்தின் தழலைவர் எம்.வை.எம்  அறபாத் தலைமையில் இடம்பெற்றது.

ஈகள் வேல்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஒஸ்மானியன் விளையாட்டுக் கழத்தின் தவிசாளர் எம்.எம்.முஹமட் அறபாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய சீருடை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் டவுன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜலீல், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சாக்கீர் ஹூசைன், அமானா வங்கியின் கல்முனை நகர கிளை முகாமையாளர் ஏ.எம். நபீல், பிரித்தானியா பிஸ்கட்டின்  கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் அதிகாரி ஏ.எல்.பாஹிம் மற்றும் கழகத்தின் செயலாளர் அப்துல் காதர் அப்துல் ஹாதி உட்பட கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.