மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அவசரமாக நாடு திரும்பவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருகின்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை வியட்நாம் சென்ற பிரதமர் நாளை புதன்கிழமை நாடு திரும்புவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்பாராத விதமாக கொலன்னாவை மீதொட்டுமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து விழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.

வியட்நாம் சென்றுள்ள பிரதமர் தமது நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்து அனைத்து சந்திப்புகளையும் துரிதப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.