மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் உயிரிழப்புக்கு ஒரு இலட்சம் ரூபா வீதமும், சொத்து மற்றும் உடமை சேதங்களுக்கு அதிகபட்சமாக 2.5 மில்லியன் ரூபா வரையிலும் இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையிலான கலந்துரையாடலின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு  மீதொட்டமுல்லவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்க திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் காணப்படும் வீடுகளை மீள் அமைக்கவோ வேறு இடங்களில் வீடுகளை நிர்மாணிக்ககவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதோடு, சேதமடைந்துள்ள வீடுகளுக்கு பதிலாக கொழும்பு நகரிலுள்ள மாடி வீடமைப்புத் திட்டத்திலிருந்து வீடுகளை வழங்க முடியும் என நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.