சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

புல்மோட்டை, கொடுவகட்டுமலை கடற்பிராந்தியத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த 13 பேரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

13 மீனவர்களையும் கைதுசெய்த கடற்படையினர், அவர்களிடமிருந்து 3 டிங்கி படகுகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறையுடைய மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக 13 மீனவர்களையும் கைப்பற்றிய பொருட்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.