பலியானோர் தொகை 27 ஆக உயர்வு ; 30 பேரைக் காணவில்லை, மீட்பு நடவடிக்கைகள் தொடர்கிறது மீதொட்டமுல்லயில்

Published By: Priyatharshan

17 Apr, 2017 | 01:58 PM
image

வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 27 ஆக உயர்ந்­துள்­ளதாகவும் 30 பேரைக் காணவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் 7 சிறு­வர்கள்இ 9 பெண்கள் உள்­ளிட்ட 27 பேரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­துடன் காய­ம­டைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இதேவேளைஇ நேற்று இரவு புதையுண்டுள்ள ஒருவரினது என கருதப்படும் உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கால் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டதாக மீட்புப்பணியாளர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மீட்­கப்­பட்ட 27 சட­லங்­களில் 5 சட­லங்கள் தொடர்ந்தும் அடை­யாளம் காண்­ப­தற்­காகபொலிஸ் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் குப்பை மேடு சரிந்­ததில்இ அதன் அருகில் இருந்த வீடு­க­ளுக்குள் இருந்­த­வர்கள் மண்இ குப்பை மற்றும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள நிலையில் அவர்­களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த குப்பை மேடு சரிவு அன்ர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட 180 குடும்­பங்­களைச் சேர்ந்த 625 பேர் தொடர்ந்து கொலன்­னாவ டெரன்ஸ் என் சில்வா வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­க­ளுக்­கான உலர் உணவு உள்­ளிட்ட வச­திகள் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் ஏற்­பாட்டில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் சரிவுப் பகு­தி­யினை ஆய்வு செய்த பேரா­தணை பல்­க­லைக்­க­ழக புவியல் தொடர்­பி­லான 10 பேர் கொன்ட விஷேட குழுஇ தேசிய கட்­டிட ஆய்வு மையம் மற்றும் சுரங்கஇ அகழ்­வா­ராய்ச்சி மையத்தின் பரிந்­து­ரைக்கு அமையஇ மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்டை அண்­மித்த பகு­தியில் வசிக்கும் 125 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

தொடர்ச்­சி­யாக குப்பை மேட்டில் சரி­வுகள் இடம்­பெற வாய்ப்­புள்­ளதால் இவ்­வாறு அவர்கள் பாது­காப்­பான இடங்­களை நோக்கி அனுப்பி வைக்­கப்ப்ட்­டுள்­ளனர். குப்பை மேடு சரிவு கார­ண­மாக மீத்­தொட்­ட­முல்­லவின் நாக­ஹ­முல்ல வீதிஇ தஹம் புரஇ மிரிகே வத்த மற்றும் 23 ஆம் தோட்டம் ஆகிய பகு­திலில் உள்ள வீடுகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் நீர் விநி­யோக கட்­ட­மைப்பு முற்­றாக சிதைந்­துள்­ளது.

இதனால் அப்­ப­கு­தியில் நீரா­னது நிரம்­பி­யுள்ள நிலையில் அவை குப்பை மேட்டின் அடிப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்­துள்­ளதால் மேலும் சரி­வுகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என கட்­டிட ஆய்­வு­மைய நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தை­ய­டுத்தே இவர்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

புத்­தாண்டு தின­மான கடந்த 14 ஆம் திகதி பிற்­பகல் 2.00 மணி­ய­ளவில் மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேடா­னது பாரிய சத்­த­துடன் அதன் அருகே இருந்த வீடுகள் மீது சரிந்­தி­ருந்­தது.  இந்­நி­லையில் அதனுள் புதை­யுண்­டுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ச்­சி­யாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனர்த்தம் சம்­ப­விக்கும் போதுஇ எத்­தனை பேர் வீடு­களில் இருந்­தார்கள் என்­பது தொடர்பில் சரி­யான தக­வல்கள் இல்­லா­ததன் கார­ண­மாக மேலும் எத்­தனை பேர் மண்­ணுக்குள் புதை­யுன்டு காணாமல் போயுள்­ளனர் என்­பதை சரி­யாக கூற முடி­யா­துள்­ள­தாக மீட்புப் பணி­யா­ளர்கள் சார்பில்இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

எந்த தரப்­பி­ட­மி­ருந்தும் புதை­யுண்­டுள்­ள­வர்கள் அல்­லது காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் சரி­யான எண்­ணிக்கை மற்றும் தக­வல்கள் தமக்கு கிடைக்­கா­ததால் இந் நிலைமை தொடர்­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் உயி­ருடன் மீண்­ட­வர்கள் தம்­முடன் யாரெல்லம் வீட்டில் இருந்­தனர்இ யாரை­யெல்லாம் காண­வில்லை என்­பதை தெளி­வாக கூறு­வார்­க­ளாயின் அதனை மையப்­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும் கருத்து தெரி­வித்த மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்­டுக்கு எதி­ரான மக்கள் இயக்­கத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி நுவன் போப்­பகேஇ

குறைந்­தது 22 பேர் வரை தற்­போ­தைய சூழலில் மண்­ணுக்குள் சிறைப்­பட்­டி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார். எனினும் அதனை சரி­யாக கூற முடி­யாது என சுட்­டிக்­காட்­டிய அவர் தமது தக­வல்­க­ளுக்கு அமை­யவே அந்த எண்­ணிக்கை கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் புது வருடம் என்­பதால் வீடு­களில் இருந்த உற­வி­னர்கள் போன்றோர் தொடர்­பிலும் அவ­தானம்  செலுத்­தப்­படல் வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே நேற்று முன் தினம் பேரா­தனை பல்­க­லையின் புவியல் தொடர்­பி­லான சிறப்பு குழுவும் தேசிய கட்­டிட ஆய்வு மையம் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் தலை­வர்­களும் மீத்­தொட்ட முல்ல குப்பை மேட்டு பகு­திக்கு விஜயம் செய்து நில­வ­ரத்தை ஆராய்ந்­தனர்.

நேற்று முன் தினம் சரி­வுக்கு உள்­ளான மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டின் பகு­தி­களை நேரில் சென்று பார்­வை­யிட்ட தேசிய கட்­டிட ஆய்வு மையத்தின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ். பண்­டார ­தெ­ரி­விக்­கையில் .

குப்பை மேட்டின் ஒரு பகு­தியில் இருந்த பள்­ளத்தில் தொடர்ச்­சி­யாக குப்­பைகள் நிரப்­பட்­டுள்­ளன. இந் நாட்­களில் நில­விய மழை­யுடன் கூடிய கால நிலைக்கு மத்­தியில் ஏற்­பட்ட அழுத்தம் கார­ண­மாக இதன் போதுஇ  மேட்டின் மறு புற கீழ்ப் பகு­தி­யா­னது மேல் நோக்கி உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு உயர்ந்த பகு­தியில் காணப்­பட்ட வீடுகள் மற்றும் கட்­டி­டங்­களும் அத­னுடன் சேர்ந்து உயர்ந்­துள்­ளன. பின்னர் அந்த உயர்ந்த பகு­தி­யா­னது சரிந்­துள்­ளது. இத­னையே எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது என தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளி­யன்று அனர்த்தம் ஏற்­பட்டு சுமார் 10 மணி நேரத்தின்  பின்­ன­ரேயே மீட்புப் பணி­க­ளுக்­கு­ரிய வச­திகள் கிடைத்­தன. அதற்கு உட்­பட்ட நேரத்தில் பொலி­ஸாரும் பொது மக்­களும் இரா­ணு­வத்­தி­னரும் மீட்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். குறிப்­பாக மண் அள்­ளு­வ­தற்கு தேவை­யான ட்ரெக்­டர்கள் அல்­லது லொரிகள்இஎக்­ஸி­னேற்­றர்கள் போன்­ற­வற்­றுக்கு தட்­டுப்­பாடு நில­விய நிலையில் பல மணி நேரம் கழித்தே அவை கிடைத்­தன. இ உட­ன­டி­யாக கிடைத்­தி­ருப்பின் மேலும் சிலரை உயி­ருடன் மீட்­டி­ருக்­கலாம் எனவும் பிர­தேச மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும்  மீட்புப் பணி­க­ளுக்கு முப்­ப­டை­யினர்இ பொலிஸார் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் தொடர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் நிலையில்இ இன்றும் அந் நட­வ­டிக்­கைகள் தொடர்­வுள்­ளன.

இந்த குப்பை மேடு சரிவு கார­ண­மாக மர­ணித்­துள்ள 24 பேரில் 11 பேரின் இறுதிக் கிரி­யைகள் நேற்று இடம்­பெற்­றன. ஒரே குடும்­பத்தை சேர்ந்த தாய்இ தந்தை மகள் மற்றும் மகளின் மகள் உள்­ளிட்ட நால்­வரின் இறுதி கிரி­யை­களும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் மூவரின் இறுதிக் கிரி­யையும்  இடம்­பெற்­றன. முன்­ன­தாக நேற்று முன் தினம் இந்த அனர்த்­ததில் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

மீரி­ய­பெத்த மண் சரிவின் போது மீட்புப் பணி­களை முன்­னெ­டுத்த இரா­ணுவ விஷேட படை­ய­ணிக்கு கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான இரா­ணுவ கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்­கவின் கீழ் மீட்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மீட்புப் பணி­களில் மேஜர் ஜெனரல் சுதத் ரண­சிங்­கவின் வழி நடத்­தலின் கீழ் சுமார் 600 வரை­யி­லான முப்­படை வீரர்­களும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் நேரடி மேற்­பார்­வையில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க மற்றும் விஷேட பொலிஸ் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய 150 வரை­யி­லான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் விமா­னப்­ப­டையின் பெல் 212 ரக ஹெலி­கப்­டர்கள் 2 உம் தயார் ம்னிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

கொழும்பு மா நகர சபைக்கு உட்­பட்ட பகு­தி­களின் குப்­பைகள் புளூ­மெண்டல் பகு­தியில்    கொட்­டப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­ட­தைய்­டுத்து 2008 ஆம் ஆண்டு மீத்­தொ­ட­முல்­லையில் குப்பைக் கொட்டும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின.

இந் நிலையில் ஒரு நாளைக்கு 8 டொன் வரையில் குப்­பைகள் மீத்­தொட்ட முல்­லையில் கொட்­டப்­ப­டு­வ­துடன் சுமார் 300 அடி வரையில் குப்பை மேடா­னது வளர்ந்­துள்­ளது. ஆரம்­பத்தில் 2 ஏக்­கர்­க­ளுக்கு உட்­பட்டு கொட்­டப்­பட்டு வந்த குப்­பை­க­ளா­னது தற்­போது 20 ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்து குப்பை மேடாக பரந்­துள்­ளது.

தற்­போது சரி­வுக்கு உட்­பட்­டுள்ள மீத்­தொட்­ட­முல்லை குப்பை மேட்டு பகு­தி­யா­னது முன்­னைய வயல் பகு­தி­யாகும். ' பொத்­துவில் வயல்' என அழைக்­கப்­படும் இப்­ப­கு­தி­யா­னது 1989 ஆம் ஆண்டு கொழும்பை அழி­வுக்கு உட்­ப­டுத்­திய வெள்ளப் பெருக்கு கார­ண­மாக கடுமையாக சேதமடைந்த பகுதியாகும். அதன் பின்னர் அப்பகுதியை நிரப்பி முல்லேரியா நகர சபையானது கொலன்னாவைஇ முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகளை மட்டும் கொட்ட ஆரம்பித்துள்ளன. குப்பைக்கு மேலால் மண்ணை போட்டு நிரப்பி குப்பைகளை கொட்டும் முறைமை ஆரம்பத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மா நகர சபை பகுதிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளும் மீத்தொட்டமுல்ல குப்பை மேட்டில் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு மலை போல் காட்சி தரும் நிலையில்இ அதனை அண்டிய பகுதியில் மட்டும் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டு 30 ஆயிரம் பேர் வரை வசிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36