வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயணத்தின் இடைநடுவில் அவசரமாக நாடு திரும்ப எண்ணியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு நாளைய தினம் நாடுதிரும்பவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தை முன்னிட்டே வியட்நாமுக்கான விஜயத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு நாடுதிரும்புவதற்கு பிரதமர் எண்ணியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.