மீதொட்டமுல்லை குப்பைமேடு அனர்த்தம் குறித்து ஐந்து தினங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கவும் : ஜனாதிபதி உத்தரவு 

Published By: Priyatharshan

17 Apr, 2017 | 10:39 AM
image

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமையால் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய கணிப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை ஐந்து தினங்களுக்குள்  சமர்ப்பிக்கப்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு கூடியளவு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அந்த நடவடிக்கைகளின் போது பணத்தை ஒரு தடையாக கருதவேண்டாம் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீதொட்ட முல்லையில் குப்பை மேடு இடிந்து வீழ்ந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முற்பகல் இடர் முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக ரணவக, விஜேதாச ராஜபக்ஷ, ஏ.எச்.எம். பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பிரசன்ன சோலங்கஆரச்சி ஆகியோரும், பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் பிரதானிகளும், அரச அதிகாரிகளும்  கலந்துகொண்டனர்.  

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

மீதொட்ட முல்ல பகுதியில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்களை அந்த பிரதேசத்திலிருந்து அகற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 

இதற்காக மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள நெல் விற்பனை சபைக்கு சொந்தமான 03 களஞ்சிய சாலைகளை தற்காலிகமாக உபயோகிக்க முடியும். அத்துடன்  மக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தற்காலிக இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.  

மக்களது வீடுகளில் காணப்படும் பெறுமதிமிக்க பொருட்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவை தொடர்பில் உரிய மதிப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கு முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கும் நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது. ஆகவே  அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய கணிப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை  ஐந்து  தினங்களுக்குள் எனக்கு சமர்ப்பியுங்கள்  

மக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். அத்துடன் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் அம் மக்களது தேவைகளைக் கண்டறிந்து உதவிகளை வழங்குங்கள் என்றார். 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும், மீள குடியமர்த்துவதற்கும் அரசினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.  

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பான கூட்டங்களை மூன்று தினங்களுககொரு தடவையாவது நடத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதற்கு அமைவாக எதிர்வரும் புதன்கிழமை மு.ப. 8.30க்கு இடர் முகாமைத்துவ அமைச்சில் மீண்டும் மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31