அம்பலந்தொட - மிரிஜ்ஜிவில பகுதியில் உணவுக்காக வழங்கப்பட்ட கரட் தொண்டையில் சிக்கியதில் சிறு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் ஒருவர் தனது ஒரு வயது குழந்தைக்கு இன்று காலை வழங்கிய உணவில் இருந்த கரட் தொண்டையில் சிக்குண்டுள்ளது. குறித்த குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.