(லியோ நிரோஷ தர்ஷன்)

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா  எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது அரசாங்க உயர் மட்டத்தினரை சந்திக்க உள்ள பிரித்தானிய அமைச்சர் , லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் பிந்திய உலகின் சவால்கள் என்ற தலைப்பில்  கீழ் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் எதிர் கட்சி தலைவர் இரா,சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பை கொழும்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சந்திக்க உள்ள பிரித்தானிய  அமைச்சர் வடக்கிற்கும் விஜயம்  செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் வடக்கு விஜயம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.