கொலன்னாவ, மீட்டொத்தமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில்  இடிப்பாடுகளினுள் சிக்குண்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தத்தில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச் சம்பவத்தினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

குப்பை மேட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.