காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், இன்று காலை ஆசிரியர் ஒருவரை விக்கெட் பொல்லால் தாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.