ஒரு தொகை ஹெரோய் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று மாலை டுபாயில் இருந்து வந்த EK 648 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அவருடைய பாதணிகளுக்கு அடியில் ஒரு தொகை ஹெரோய் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவரின் பாதணியிலிருந்து ஒரு கிலோவும் 156 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.