நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சென்றெகுலார்ஸ் தோட்டத்தில் இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பின்புரத்தில் உள்ள சமையல் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மலசலகூடமும் சேதமாகியுள்ளது.

இக்குடியிருப்பு பகுதியில் பின் புரத்தில் இருந்த பாரிய மண்மேடே சரிந்து விழுந்துள்ளது. இந்த வீட்டில் இருந்த 06 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள 6 பேரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், நிவாரண உதவிகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.