சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த 8 பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR654 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை 5:12 மணிக்கு இலங்கை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

கடத்தப்பட்ட 8 பேரின் உறவினர்கள் பெருந்திரளானோர் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது விமானநிலையச் செய்தியாளர் தெரிவித்தார்.