(எம்.எப்.எம்.பஸீர்)

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விஷேட சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரிர சிகிச்சைப் பிரிவில் இந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டு அவரது ஆணுறுப்பு ஒட்டப்ப்ட்டதாகவும் தற்சமயம் அவர் 4 ஆம் இலக்க வோர்ட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று பிர்பகல் வேளையில் மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது  கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியது. அனுராத புரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30 வயதுடைய  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சோக சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார்.

ஹிங்குராங்கொடை, பாலு வெவ - ஜன உதான கமவில் உள்ள கள்ளக் காதலியின் வீட்டில் வைத்தே பொலிஸ் கான்ச்டபிள் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார். படுகாயமடைந்த நிலையில் முதலில் ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்ட  பொலிஸ் கான்ச்டபிள் பின்னர் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டு தற் சமயம் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

30 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹிங்குரான்கொட பகுதியில் பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந் நிலையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயமானது முதலாவது கள்ளக் காதல் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. திருமனம் செய்துகொள்வதாக உறுதியளித்தே கணவனை இழந்த முதலாவது பெண்ணுடன் கள்ளக் காதல் தொடர்பை பொலிஸ் கான்ச்டபிள் தொடர்ந்துள்ளார். மற்றைய பெண்ணுடனான தொடர்பால் இருவருக்கும் இடையில் வாக்கு வாதமும் ஏற்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி கள்ளக் காதல் சுகத்தை அனுபவிக்க குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கள்ளக் காதலியின் வீட்டுக்கு சென்ர போது 2 ஆவது காதலியிடம் இருந்து அவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்ரு வந்துள்ளது. இந் நிலையில் அந்த எஸ்.எம்.எஸ். தகவலால் கோபம் கொண்ட முதலாவது கள்ளக் காதலி, உரவு கொள்ள தயாரான போது கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆணுறுப்பை வெட்டிய பெண் ஹிங்கிஉராங்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.