மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப்போல் மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என த.தே.கூ.வின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்ல வேண்டியதேவையில்லை அதனை மக்கள் நிச்சயம் செய்வார்கள் மைத்திரி அரசாங்கம் மட்டு மல்ல அவர்களுடன் சேர்ந்து இரா.சம்மந்தனும் நிச்சயமாக வீட்டுக்குச் செல்வார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கலந்து கொண்டு மஹிந்த அரசாங்கத்தைபோல் மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என கூறியுள்ளார். அதனை அவர் கூறவேண்டிய அவசியம் கிடையாது. 
அந்த கடமையை மக்கள் நிச்சயமாக செய்வார்கள். மைத்திரி அரசாங்கத்தை மட்டுமல்ல இரா.சம்மந்தனையும் சேர்த்தே மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். இந்நிலையில் மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள் என சம்மந்தன் கூறியிருப்பது தான் ஏதோ தமிழ் மக்களின் பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கேயாகும். 
இரா.சம்மந்தன் என்ன நேற்று பிறந்த குழந்தையா? அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாமல் இருப்பதற்கு. அவரே சொல்வார் உங்கள் வயதின் அளவு காலம் தான் அரசியல் இருப்பதாக. அப்படியானால் அவருக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது தெரியாதா? எனவே அரசாங்கத்தையும் இரா.சம்மந்தன் உட்பட அவருடைய குழுவை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தமிழ் மக்கள் நிச்சயம் செம்மையாக செய்வார்கள் அதனை இரா.சம்மந்தன் கூறவேண்டிய அவசியம் கிடையாது.


தமிழ் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளம் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணை யத்தின் கூட்டத்தொடரில் இடப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தலமைகள் இலங்கை அரசா ங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கின்றார்கள்.
எதிர்கட்சி தலைவரின் பணி என்ன? அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை கண்டிப்பதே. ஆனால் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் என்ன செய்தார்? தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவரானவர், அதே தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமானவர்களையும் இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாத்துள்ளார்.
அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்கட்சி தலைவரின் பணியாகும். ஆனால் சம்மந்தன் என்ன செய்தார். தமிழ் மக்களின் வாக்குக ளை பெற்று எதிர்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர் அதே மக்களுக்கு நடந்த அழிவு களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத்தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார். தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது. இரு தடவையும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அந்த வாய்புக்களை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள்.
ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது 2012 இல் நாங்கள் கூறியிருந்தோம். அதாவது இந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்கான தீர்மானம் அல்ல. இந்த தீர்மானத்தின் நோக்கம் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்த்து தமக்கு சாதகமான ஆட்சியை இலங்கையில் கொண்டுவருவதற்கானது என்பதை நாங்கள்கூறினோம். ஆனால் அப்போது நாங்கள் மஹிந்த ராஜபக்சவை காப்பாற்ற நினைக்கிறோம் என கூறினார்கள். அதுவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வந்த தீர்மானம் 30.01 கலப்பு நிதிமன்ற பொறிமுறையை வலியுறுத்தவில்லை. உள்ளக விசாரணையை வலியுறுத்தியது. காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்குசாதகமான அரசாங்கம் இங்கே ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே அதனை காப்பாற்றவேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகா சம் வழங்கியமை தொடர்பாக கால அவகாசத்தை வழங்கியவர்கள் கூறும் விடயம் என்ன வென்றால் ஐ.நா தீர்மானத்தில் பொறுப்புகூறல் என்பது ஒரு விடயம் அதனை விடவும் பல விடயங்கள் உள்ளது. 
எனவே பொறுப்புகூறல் என்ற ஒரு விடயத்திற் காக மற்றய விடயங்களை விடுவதா? என்பதே ஆனால் பொறுப்புகூறல் மற்றும் நீதி தொ டர்பாக கலப்பு நீதிமன்றம் அமைக்க தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்க தயாரில்லை. என அரசாங்கம் பகிரங்கமாக கூறியிருக்கின்றது. மேலும் கலப்பு நீதிமன்ற பொறிமுறை அல்ல உள்ளக பொறிமுறை ஊடாகவும் இராணுவம் அல்லது ராஜபக்ச தரப்பு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது. எனவே பொறுப்புகூறல் என்பது நிறைவேற்றப்படப்போவதில்லை. மேலும் 2வருட கால அ வகாசம் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளாது. அதேபோல் 2012 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவந்த போது ராஜபக்சவுக்கு ஆதரவான நாடுகள் அதனை எதிர்த்தன அதாவது யூ.பி.ஆர் என்ற பொறிமுறை உள்ளது அந்த பொறிமுறை ஊடாக உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 4 வருடத்திற்கு ஒரு தடவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பரிசீலனை செய்யும். 
அதன்ஊடாக விசாரிக்கலாம். எனவே தீர்;மானம் தேவையற்றது என அந்த நாடுகள் கூறியிரு ந்தன. அப்போது ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்த நாடுகள் இங்கே மோசமான மனி த உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் நடைபெற்றுள்ளமையினால் யூ.பி.ஏ ஊடா க விசாரிக்க இயலாது என. அதே நாடுகள் இன்று கூறுகின்றன. தீர்மானத்தில் பொறுப்புகூறலுடன் பல விடயங்கள் உள்ளன. எனவே பொறுப்புகூறலை மட்டும் எடுத்து கொண்டு மற்றய விடயங்களை விடுவதா? என. மேலும் யூ.பி.ஆர் ஊடாக பொ றுப்புகூறல் தவிர்ந்த மற்றய விடயங்கள் அனைத்தையும் செய்யலாம். ஆனால் பொறுப் புகூறலை செய்ய இயலாது. 
மேலும் ஐ.நா தீர்மானத்தை சர்வதேசம் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு காரணம் இலங்கை அரசாங்கம் பலவீனமான அரசாங்கமாக மாறி கொண்டிருப்பதனால் அடுத்தகட்டம் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வந் தால் அதனை தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கேயாகும். மேலும் தமிழ் தலமைகள் கால அவகாசம் வழங்குவதற்கு எதிர்பான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளம் இட்டிருக்கலாம். ஆனால் தமிழ் தலமைகள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது. மேலும் பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றால் சீனா, ரஸ் யா போன்ற நாடுகள் எதிர்க்கும் என கூறப்படுவது முழுமையும் பொய். சீனா தனது வீட்டோ அதிகாரத்தை ஆக குறைந்தது 11 தடவைகள் மட்டுமே பயன்படுத்தி யுள்ளது. அதேபோல் ரஸ்யா 106 தடவைகள் பயன்படுத்தியுள்ளது. எனினும் அதில் n பரும்பான்மையானவற்றை 1969ம் ஆண்டுக்கு முன்னரே பயன்படுத்தியுள்ளது. ஆக மொ த்தத்தில் இரு நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை தமக்கு நேரடி பாதிப்பு உண்டாகும் நிலையிலேயே பயன்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.