இன உறுப்புகளின் வளர்ச்சியை கண்டறிய உதவும் கேரியோடைப்பிங் பரிசோதனை (karyotype test)

Published By: Robert

12 Apr, 2017 | 11:58 AM
image

மாறி வரும் புறச்சூழல், கதிர்வீச்சு,செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை புகை, கழிவுகள் ஆகியவற்றுடன் நாம் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். அதிலும் மைதா மாவால் தயாரிக்கப்படும் புரோட்டா போன்ற உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். இதிலுள்ள ‘அலாக்ஸான்’ என்ற ரசாயனப் பொருள் எம்முடைய மரபு ரீதியிலான உடல் ஆரோக்கியத்தையே மாற்றிவிடுகிறது. 

இதன் காரணமாக இன்றைய திகதியில் ஆணா  அல்லது பெண்ணா என தீர்மானிக்க முடியாத வகையில் பாலின உறுப்புகளில் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள். இதன் நீட்சியாக ஒரு சில பெண்கள் பருவ வயதை எட்டிய பிறகும் பருவமடையாமல் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு கேரியோடைப்பிங் பரிசோதனை என்ற மரபியல் பரிசோதனைகளை செய்து குறைபாடுகளையும், அதற்கான காரணங்களையும் கண்டறிகிறார்கள். இந்த சோதனையின் மூலம் ஆணா பெண்ணா என்பதை துல்லியமாக கண்டறிந்து உறுதிப்படுத்த இயலும். ஆனாலும் ஒரு சில தருணங்களில் இத்தகைய சோதனைகளுக்கு பிறகும் ஒரு சிலருக்கு பாலின உறுப்புகளில் குறைபாடுகள் இருப்பதை மருத்துவ உலகம் கண்டிருக்கிறது. இதன் போது மருத்துவ நிபுணர்கள், கேரியோடைப்பிங் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற சோதனைகளையும் செய்து தான் பாலின உறுப்புகளின் செயல்பாடுகளையும், அதன் இயல்பான இடத்தில் இல்லாமல் உடலில் வேறு பகுதியில் இருக்கிறதா? என்பதையும் கண்டறிகிறார்கள். பின்னர் அதனை சரியான இடத்தில் சத்திர சிகிச்சை செய்து பொருத்துகிறார்கள்.

ஒரு சில குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேற்றும் உறுப்புகளுக்கு கீழேஇருக்கவேண்டிய விதைப்பை இல்லாமல் கூட இருக்கும். இவர்களுக்கு விதைப்பை எங்கு இருக்கிறது? என்பதை கண்டறிந்து அதனை அங்கிருந்து அகற்றி, சரியான இடத்தில் பொருத்துவார்கள். இது போல் விதைப்பை இடம் மாறி அமைந்திருந்தால், அதற்கு கிரிப்ட் ஓர்க்கிடிஸம் (cryptorchidism) என்று குறிப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு அவர்களுடைய உடலின் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருந்தால் இது போன்று வரக்கூடும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

Dr. வெங்கடேசன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04