(எம்.எப்.எம்.பஸீர்)

அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல் வாதிகளின் தனிப்பட்ட பாதுகாவலராக செயற்பட்டிருந்த, லீசிங் நிறுவனங்களுக்காக வாகனங்களை மீளப் பெற்றுக்கொடுக்கும் சீசர் ஒருவராக இருந்து பின்னர் பிரபல வர்த்தகராக செயற்பட்டு வரும் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.   

அரசியல் வாதிகளிடமிருந்து தற்போது தூரமாகி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக  கூறப்படும் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான  லொக்கு ரால் அலாகே அஜந்த புஷ்பகுமார பியகம  என்பவர் கடந்த ஞாயிற்றுகிழமை காலை வேளையில், பண்டாரவளை பொலிஸார் எனக் கூறிக்கொண்டோரால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கண்டறிய இந்த பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.