கிளிநொச்சி சேவயர்கடைச்  சந்திக்கு அருகில் வேன் ஒன்று தடம்புரண்டதில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்த வயோதிபரின்  வீட்டிற்கு சென்றுகொன்றிருந்த  வேளையே  குறித்த வாகனம்  வேகக்கட்டுப்பாட்டை  இழந்து தடம்புரண்டதில்  கிளிநொச்சி திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து  தொடர்பான  விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்