நோயை விரட்டும் Sleep Hygiene

Published By: Robert

11 Apr, 2017 | 11:32 AM
image

எம்மில் ஒரு சிலருக்கு பகல் பொழுது முழுவதும் சோர்வு, தலைச்சுற்றல், மன அழுத்தம், தலைபாரம், மலச்சிக்கல்,இடதுப் பக்க கழுத்து வலி, செய்யும் பணியை ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என்று செய்வது, இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதயத்துடிப்பு இயல்பான அளவை விடஅதிகளவில் துடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றியிருக்கும். இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றியிருந்தால் நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இவர்களுக்கு மருத்துவர்கள் Sleep Hygiene என்ற சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

Sleep Hygiene என்றால் ஆரோக்கியமான தூக்கம் என்று குறிப்பிடலாம். தூக்கத்தில் ஆரோக்கியமான தூக்கம் ஆரோக்கியமற்ற தூக்கம் என்று இருக்கிறதா? என்று கேட்காதீர்கள். இருக்கிறது. உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எப்படி சத்தான சரிவிகித உணவு முக்கியமாக இருக்கிறதோ அதே போல் ஆரோக்கியமான தூக்கமும் அவசியம்.

ஒரு சில ஒழுங்கு முறைகளை நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடித்தால் தூக்கமின்மையை சீரமைக்கலாம். முதலில், தினமும் இரவில் உறங்கப்போகும் நேரத்தையும், காலையில் எழுந்திருக்கும் நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். உதாரணத்திற்கு தினமும் இரவு 10 மணிக்கு தூங்கி, காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்றால், இந்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறையை தான் மருத்துவத்துறையினர் ஆரோக்கியமான உறக்கம் அதாவது Sleep Hygiene என்கிறார்கள்.  

அதே போல் Sleep Hygiene க்கு தூங்கும் அறை, படுக்கை விரிப்பு, வெளிச்சம், தலையணை உறையின் வண்ணம்,அறையில் பராமரிக்கப்படவேண்டிய வெப்ப நிலை ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். இவையனைத்தும் உங்களின் மனதிற்கு நெருக்கமாக இருந்தால் தான் ஆரோக்கியமான தூக்கம் சாத்தியமாகும்.

இதனை ஏற்படுத்திக் கொள்வதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்று எண்ணுபவர்கள், தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் வேறு வழியேயில்லை. நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாற்பதைந்து நிமிடத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும்.கோப்பி, தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தால்,அதனை ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளாக குறைத்துக் கொள்ளவேண்டும். அதிலும் இரவு 7 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் இவ்விரண்டு பானங்களையும் அருந்தக்கூடாது. புகை, மது முற்றாக துறக்கவேண்டும். யோகா, தியானம் போன்றவற்றில் ஆர்வமிருந்தால் அதனை செய்யலாம். மனதை தொடர்ச்சியாக உற்சாகமாக வைத்துக் கொள்ளமுடியவில்லை என்றாலும் கூட மனதில் கவலையை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் போதும். இதனை தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் கடைபிடித்தால் Sleep Hygiene வசப்படும். உங்களை வாட்டிய தூக்கமின்மை பிரச்சினை காணமற்போய்விடும். இதன் காரணமாக உங்களுடைய உடலுக்கு வரவிருக்கும் நோய்களும் வராது. ஒரு சிலருக்கு இதன் பின்னரும் தூக்கமின்மை பிரச்சினை தொடருமேயானல் தவிர்க்காமல் உடனடியாக மன நல நிபுணர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Dr.ராமகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29