தென்னிந்திய பெருங் கடலில் இலங்கைக்கு காணப்படும் பூகோள சிறப்பு உரித்துக்கள் சீனா வசமாகும் அபாயம் - ஜீ.எல். எச்சரிக்கை

Published By: Priyatharshan

11 Apr, 2017 | 11:26 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தென்னிந்திய கடலில் இலங்கைக்கு காணப்படும் பூகோள சிறப்புகளின் அதிகாரம் சீனாவின் வசம் செல்லும் நிலையே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் காணப்படுகின்றது.

100 கிலோ மீற்றர் பரப்பிற்குள் வேறு துறைமுகசார் நடவடிக்கைகள் இடம்பெற கூடாது என சீனா ஒப்பந்தத்தில் கூறிப்பிடுகின்றமை இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் இலங்கைக்கு அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனா எமது வளங்களை மாத்திரம் அல்ல கிடைக்கும் வருமானத்தையும் அள்ளி செல்கின்றது.

அரசாங்கம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யாது மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான காணி மதப்பீடு மிகவும் அநீதியான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெறுமதி மிக்க காணிகள் ஆக குறைந்த விலைகளில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் 80 வீத பங்குகள் சீனாவிற்கும் 20 வீதமான பங்குகள் இலங்கைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்கும் வகையில் அரசாங்கம், 60 வீதமான பங்குகள் சீனாவிற்கும் 40 வீதமான பங்குகள் இலங்கைக்கும் என போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது.

சீனாவுடனான ஒப்பந்த வரைபை இதுவரையில் அரசாங்கம் வெளியிடாதது ஏன் ? என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் உண்டு. அப்பாந்தோட்டை துறைமுகத்தின் மூன்றாம் கட்டம் 2ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஓப்பந்தத்தில் ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக 80 வீதமம் சீனாவிற்கும் 20 வீதம் இலங்கைக்கு எனும் போது, மூன்றாம் கட்ட பணிகளுக்கான 20 வீதத்தை அதாவது 400மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை வழங்க வேண்டியதுள்ளது. இந்த தொகையை செலுத்தா விட்டால் சீனாவின் 80 வீதமான பங்குகளில் அதிகரிப்பு நிலை ஏற்படும்.

ஒப்பந்தத்தில் காணப்படும் இந்த உண்மைகளை நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கூற வில்லை. மாறாக 10 வருடத்தில் 50 வீதமான பங்குகள் இலங்கைக்கு கிடைக்கும் என கூறி வருகின்றது.

மேலும் அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் முழுமையடைந்து 6 மாதங்களின் பின்னர் சீனா சர்வதேச மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இலங்கையுடன் இலாப நட்டத்தை பகிரப்போகின்றது.

ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளும் உள்ளக அளவுக்கோள்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச முதலீடுகளுக்காக ஒப்பந்தங்கள் மேகொள்ளும் போது விஞ்ஞான ரீதியில் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானதாகும். 100 கிலோ மீற்றர் பரப்பிற்குள் வேறு துறைமுகசார் நடவடிக்கைகள் இடம்பெற கூடாது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சீனா வசமே காணப்படும் போன்ற விடயங்களை அரசாங்கம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். தேசிய பாதுகாப்பிற்கு இது சவாலா விடயமாவே காணப்படும். அது மாத்திரமின்றி தென்னிந்திய கடலில் இலங்கைக்கு காணப்படும் சிறப்பின் அதிகாரம் சீனாவின் வசம் செல்லும் நிலையே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37