எமக்கு பொது­மன்­னிப்பை வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியை கோர வேண்டும் : தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை

Published By: Priyatharshan

11 Apr, 2017 | 11:18 AM
image

நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எமக்கு பொது மன்­னிப்பை வழங்கி விடு­தலை செய்ய வேண்டும். ஜனா­தி­பதி நல்­லெண்ண சமிக்­ஞை­யாக இச்­செ­யற்­பாட்­டினை முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்த வேண்டும் என்று தமிழ் அர­சியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்­த­னிடம் கோரி­யுள்­ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் நேற்று திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பாணம் சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

இதன்­போது அங்கு  நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 10 தமிழ் அர­சியல் கைதி­களை நேரில் சந்­தித்து அவர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கேட்­ட­றிந்­துக்­கொண்டார்.

இதன் போதே மேற்­படி தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். தமிழ் அர­சியல் கைதிகள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரி­வித்­தா­வது நாங்கள் நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளோம். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பல்­வேறு வழக்­குகள் சாட்­சி­யங்­க­ளற்ற நிலை­யிலும் எம்­மீது தொடுக்­கப்­பட்­டு்ள்­ளன.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது விடு­தலை தொடர்­பாக சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரத போராட்டம் உட்­பட பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் இன்று வரை­யிலும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி நல்­லி­ணக்கம் சம்­பந்­த­மாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கிறார்.

பிர­பா­கரன் ஏன் உரு­வானார் என்­ப­தற்­கான கார­ணத்தை கண்­ட­றிய வேண்டும் எனவும் அவர் தனது உரை­களில் சுட்­டிக்­காட்­டு­கிறார். இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்கும் அவ­ரி­டத்தில் எமது விடு­தலை சம்­பந்­த­மாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கூடிய அளவு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்டும்.

குறிப்­பாக கடந்த காலங்­களில்  அர­சி­யலில் அசா­தா­ரண நிலைகள் காணப்­பட்ட நிலை­யிலே தான் நாம் கைது செய்­யப்­பட்டோம். ஆகவே எதிர்­காலம் நோக்கி சிந்­திக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளி­டத்தில் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட எமக்கு ஓரு பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையி்ல் விடு­தலை வழங்க வேண்டும் என்­பதை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­யி­டத்தில் வலி­யு­றுத்தி தீர்வு பெற்­று­தர வேண்டும்.

அதே­நேரம் எமது வழக்­கு­களை கையாள்­வ­தற்­காக விசேட நீதி­மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. இந்த நீதி­மன்­றத்தின் ஊடாக கடந்த 2 வரு­டங்­களில் இரு­வரின் வழக்­குகள் மாத்­தி­ரமே நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்கு தமிழ் மொழி ரீதி­யான தமிழ் மொழியில் பரீட்­சயம் இல்­லாத நீதி­ப­திகள்இ சட்­டத்­த­ர­ணிகள், உத்­தி­யோ­கத்­தர்கள் காணப்­ப­டு­கின்­ற­மையே கார­ண­மா­கின்­றது.

ஆகவே விசேட நீதி­மன்­றத்தின் ஊடாக எமக்கு எவ்­வி­த­மான நன்­மை­களும் கிட்­ட­வில்லை. அதே­நேரம் நாம் எமது வழக்­கு­களை கையாள்­வ­தற்­காக தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்­றினை  ஏற்­பாடு செய்து தரு­மாறு ஏற்­க­னவே கூட்­மைப்­பிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இருப்பினும் தற்போது வரையில் அவ்வாறான குழுவொன்று தயார் செய்யப்படவில்லை. அது எமக்கு கவலையளிப்பதாக உள்ளது. எனவே அவ்வாறான குழுவொன்றை விரைந்து உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பை கோருவதாக அவர்கள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08