பதுளை பசறை வீதி இரண்டாம் கட்டையை தளமாக கொண்டியங்கும் நல்லதோர்வீணை நற்பணி மன்றம்  ஏற்பாடு செய்துள்ள  சித்திரைப் புத்தாண்டு கரப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில்  பசறை வீதி 7 ஆம் கட்டை விவேகானந்தா கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறும்.

இப் போட்டியில் முதலாம் பரிசாக ரூபா 50 ஆயிரம் ரொக்க பணமும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாம் பரிசாக ரூபா 30 ஆயிரம் ரொக்க பணமும் வெற்றிக் கிண்ணமும், மூன்றாம் பரிசாக ரூபா 20 ஆயிரம் ரொக்க பணமும் வெற்றிக்கிண்ணமும் சிறந்த விளையாட்டு வீரர்க ளுக்கான மூன்று பரிசுகளும் வழங்கப்பட உள்ள தாகவும் தூர பிரதேசங்களிலிருந்து வரும் அணிக ளுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும் எனவும்  நற்பணி மன்றத்தின் தலைவர் கே.ஸ்ரீகரன்  தெரிவித்தார்.  

மேலதிக விபரங்களுக்கு  0777 444 263, 077 3211232, 077 1910007 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற் பாட்டு குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.