ரணில், சம்­பந்தன், ஹக்கீம் மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்­று­கின்­றனர் : தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

Published By: Priyatharshan

11 Apr, 2017 | 10:54 AM
image

இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு­போதும் வராது என உறு­திப்­படத் தெரி­விக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் ரணில், சம்­பந்தன், ஹக்கீம், ஆகியோர் இன்று மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்றும்  குறிப்­பிட்­டது. 

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு போதும் கொண்டு வரப்­ப­ட­மாட்­டாது. புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென ஹக்கீம் கூறு­வது வெறு­மனே நாட­க­மாகும். ஏற்­க­னவே அமெ­ரிக்கா உட்­பட சர்­வ­தேச  நாடு­க­ளுக்கு அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­விட்­டது.

இன்­றைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொண்டு 13 ஆவது திருத்தம்  பலப்­ப­டுத்­தப்­பட்டு காணிஇ பொலிஸ்,  அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை வழங்­கினால் போது­மா­னது.  அது சமஷ்­டிக்கு வழி­வ­குக்கும்.

இத­னையே சம்­பந்தன்இ சுமந்­திரன் ஆகியோர் எதிர்­பார்த்­தனர். இன்று அந்த நிகழ்ச்சி நிரல் நிறை­வேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. அதே­வேளை ஹக்கீம் அர­சுக்கு முன்­வைத்த 67 கோரிக்­கை­க­ளையும் அரசு ஏற்றுக் கொண்­டுள்­ளது.

அதில் ஒன்­றுதான் கல்­முனை நகரை முஸ்லிம் நக­ர­மாக (அல­காக) ஏற்­ப­டுத்­து­வ­தாகும்.  ஜே.ஆர். ஜய­வர்த்­தன மற்றும்  பிரே­ம­தாஸ ஆகி­யோ­ரினால்  13  ஆவது திருத்­தத்தை பலப்­ப­டுத்தி முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய அரசாங்கம் அதனை நிறைவேற்றவே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகிறது   என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59