புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். எனினும் அவ்­வா­றான உடன்­பாடு எதுவும் எட்­டப்­பட்­ட­தாக எமக்குத் தெரி­ய­வில்லை. எனவே அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து திரை­ம­றை­வில்  புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது என்று  பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார். 

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு சம்­பந்­த­மாக அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்கை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் எழும் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் தீர்­வு­களை  முன்­வைப்­ப­தாகத் தெரி­யி­வல்லை. மாறாக தமக்குத் தேவை­யான விட­யங்­களை திரை­ம­றைவில்    முன்­னெ­டுத்துச் செல்­கி­றது. இதனை  மக்­கள ஆணையை மீறும் செயற்­பா­டா­கவே  நோக்க வேண்­டி­யுள்­ளது. மேலும் ஆட்­சியை கொண்டு நடத்­து­வ­தற்­கான பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத நிலைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் தேசிய வளங்­களை விற்­பனை செய்­தா­வது ஆட்­சியை கொண்டு நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முற்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நட­வ­டிக்கை மூலம் தமக்­கான மக்கள் ஆத­ரவு குறை­வ­டைந்­துள்­ள­தையும் அர­சாங்கம் அறிந்­து­கொண்­டுள்­ளது. அத­னால்தான் தேர்­தலை நடத்­தாது தொடர்ந்தும் காலம் தாழ்த்திக்கொண்டு செல்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையினால் உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்றார்.