இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, நியூசிலாந்து தேன் நிறுவனத்துடன் இணைந்து “மனுகா தேன் மற்றும் இதர தேன் தயாரிப்புகளை இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

நியூசிலாந்து தேன் கம்பனியினால் சிறந்த தேன் உற்பத்திகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம், இலங்கை மற்றும் மாலைதீவுகளில் தனது விற்பனை முகவராக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனியியை 2015 முதல் நியமித்திருந்தது.

மனுகா தேன் உற்பத்தி என்பது, இயற்கை UMF 5+ மற்றும் UMF 10+ ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை தேனீக்கள் மனுகா பூக்களிலிருந்து மட்டும் சேகரிக்கும் இயற்கை சேர்மானமாகும். மனுகா பூக்களில் பெறுமதி வாய்ந்த சேர்மானங்கள் காணப்படுவதுடன், அவற்றை வேறு எந்த பூக்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியாது.

இருதய கோளாறுகள், புற்றுநோய் மற்றும் வயிற்றுக்கோளாறு போன்றன ஒரு வகை நுண் அங்கிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன. மனுகா தேன் என்பது இந்த நுண் அங்கிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மனித ஆற்றலை மேம்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. மனுகா தேன் என்பது உயர் ஆயுர்வேத உள்ளடக்கங்களையும் தரங்களையும் கொண்டுள்ளது. இதன் பாவனையின் மூலமாக பார்வைத்திறன் மேம்படுத்தவும், உடல் எடையை குறைத்துக்கொள்ளவும், ஆஸ்துமா மற்றும் டயரியா போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், வயிற்றுக்குடல் சார்ந்த குறைபாடுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அழகியல்சார் பயன்பாட்டுக்கும் தரமான தேன் என்பது அவசியமாகிறது.

மனுகா தேன் என்பது விசேட ஆயுர்வேத குண அம்சங்களைக் கொண்டதுடன், சலோன்களில் அழகியல் தேவைகளுக்காக பயன்படுத்தவும் உகந்தது. இலங்கையில் தற்போது உலகப்புகழ்பெற்ற மனுகா தேன் வகையை கொள்வனவு செய்ய முடியும். எலுமிச்சை, கறுவா மற்றம் இஞ்சி ஆகிய மூன்று சுவைகளில் இந்த தேன் கிடைக்கிறது. நியூசிலாந்து தேன் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ஏனைய தயாரிப்புகளில், பீச் ஃபொரெஸ்ட், தைம், கமாஹி, ரடா, க்ளோவர் மற்றும் இகோ ஃபொரெஸ்ட் விசேட தேன் போன்றன அடங்கியுள்ளன.

இந்த தயாரிப்புகள் அனைத்தும் தற்போது கிரெஸ்கட் (கொழும்பு 3), உலக வர்த்தக மையம், லிபர்டி பிளாஸா, ஒடெல், ஆர்கேட் இன்டிபென்டன்ஸ் ஸ்குயார், கே-சோன் (ஜா-எல மற்றம் மொரட்டுவ), கண்டி அப்டவுன், ரோயல் மோல- கண்டி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (வெலிப்பன நிறுத்துமிடம்), நீர்கொழும்பு, ஆரிப்கோ சுப்பர் சென்டர்கள் மற்றம் லக்சல கொழும்பு ஆகியவற்றில் கிடைக்கும். 

ரோயல் ஃபுட் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. ருவன் வதுகல கருத்துத் தெரிவிக்கையில், 

“1999ல் கஜு பதப்படுத்தும் செயற்பாட்டை பொழுதுபோக்காக நான் ஆரம்பித்திருந்தேன். குறுகிய காலப்பகுதியில், என்னால் உள்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததுடன், வெளிநாட்டு சந்தைகளுக்கும் பிரவேசிக்க முடிந்தது. 

அக்கால கட்டத்தில் நியூசிலாந்து தேன் நிறுவனம் தனது உலகத்தரம் வாய்ந்த தேன் உற்பத்திகளின் புதிய தயாரிப்புகளை பரிசோதித்த வண்ணமிருந்தது. சிறந்த தரம் வாய்ந்த கறுவா அவர்களுக்கு தேவைப்பட்டது. அந்தத் தேவையை நாம் வெற்றிகரமாக நிவர்த்தி செய்தோம். இதன் மூலம் இலங்கையின் சிறந்த கறுவா உற்பத்திகளை உலகுக்கு அறிமுகம் செய்ய முடிந்தது. நியூசிலாந்து தேன் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த தேன் உற்பத்திகளை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

1999 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த ரோயல் ஃபுட் மார்க்கெட்டிங் கம்பனி, ISO 22000, HACCP மற்றும் தர சான்றுகளை கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனம் என்பதுடன், ISO 22000 தரச்சான்றையும் பெற்றுள்ளது.

Royal Cashews தயாரிப்புகள் பரந்தளவு நாவூறும் சுவைகளில் காணப்படுகின்றன. 19 சுவைகளில், 682 வகை கொள்கலன்களில் சந்தைப்படுத்தப்படுவதுடன், இதில் 101 கொள்கலன்கள் அன்பளிப்பு செய்ய உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பது, நிறுவனத்துக்கு பிரத்தியேகமான கஜுக்களை வடிவமைத்துள்ளது, இது நிறுவனத்துக்கு விசேடமானதாக அமைந்துள்ளது. இந்த சுவைகளில் Cheese and Onion, Sugar coated, Chilli Garlic, Hot Pepper, BBQ, Chilli Seasoning, Spanish Tomato, Salt Extra Fine, Shrimp & Red Onion மற்றும் Sour Cream & Onion போன்றன அடங்கியுள்ளன.

இந்த தெரிவுகளுக்கு மேலதிகமாக, இலங்கைக்கு பிரத்தியேகமான கஜு கறியும் பேணியில் அடைக்கப்பட்டு ‘Royal Cashew Nut Curry’ எனும் நாமத்தில் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் கஜு உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் பகுதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த கஜு வகைகளை கொண்டு தனது தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

Royal Cashews தயாரிப்புகள் மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், நியூசிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, மாலைதீவுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Royal Cashews வர்த்தக நாமம் என்பது பல விருதுகளையும் சுவீகரித்துள்ளது. Pro Food 2009 மற்றும் 2011 ஆகிய விருதுகளை சூழலுக்கு பாதுகாப்பான பொதியிடலுக்காக வென்றிருந்தது. மேலும் MACO business excellence விருது, Lanka Star President’s  தங்க விருது மற்றும் ASIASTAR 2015 விருது ஆகியவற்றை சூழலுக்கு பாதுகாப்பான பொதியிடலுக்காக வென்றுள்ளது.

ரோயல் ஃபுட் மார்க்கெட்டிங் கம்பனி இரு துணை நிறுவனங்களை கொண்டுள்ளது. Greenway Asia Lanka மற்றும் Trust Lanka Suppliers அவையாகும்.