மலேசிய சுங்கப்பிரிவு அதிகாரிகள் 18 காண்டாமிருக கொம்புகளை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று (10) கையகப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த காண்டாமிருக கொம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுங்க பணிப்பாளர் ஹம்ஷா சுன்டங் தெரிவித்துள்ளார்.

குறித்த கொம்புகள் மொஷாம்பிக்கில் இருந்து கட்டாருக்கு சென்ற விமானம் இடையில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, குறித்த விமானத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட காண்டமிருக கொம்புகள் 54.4 கிலோகிரம் எடையுள்ளதெனவும், அதன் பெறுமதி 13.1 ரிங்கிட் (47 கோடியே 32 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா இலங்கை பெறுமதி) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காண்டாமிருக கொம்புகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக சீனாவின் பாரம்பரிய வைத்தியத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.