துருக்கி விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் பெண் குழந்தையினை பிரசவித்துள்ளார்.

குறித்த விமானம் 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது நைபி டியாபி (28) என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாக செயற்பட்ட விமான பணிப்பெண்கள் மற்றும் ஏனைய பயணிகள் குறித்த பெண்ணுக்கு உதவியுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளதுடன், குழந்தைக்கு “கடிஜு” என பெயரிட்டுள்ளனர்.

பெண் மற்றும் குழந்தை நலமாக உள்ளதாகவும், தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி விமானசேவை தெரிவித்துள்ளது.