இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் : ரவூப் ஹகீம் 

Published By: Ponmalar

10 Apr, 2017 | 09:10 AM
image

(ஆர்.யசி)

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அஞ்சி புதிய அரசியல் அமைப்பில் பகுதி அளவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தர தீர்வுகாண முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்  என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். குறித்த காலத்தினுள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலத்தும் வகையில்  பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார். 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்இ 

உருவாக்கப்படும் அரசியல் அமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாது மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் வகையில் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சர்வசன  வாக்கெடுப்பு  அவசியப்படுகின்ற திருத்தங்களுக்கு செல்வது  மக்கள் அங்கீகாரத்தை பெறுவதில் கடினமானாதாக அமையும் என புதிய சில காரணிகளை  ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பானது இந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலான நிரந்த தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமையப்பெற்ற வேண்டும். 

வெறுமனே கண்துடைப்பு வகையில்  அல்லது இருட்டிலே தீர்வை  தேடும் வகையில் இந்த விடயங்கள் அமையப்பெறக் கூடாது. மிகத் தெளிவாக சில விடயங்களை அடையாளம் கண்டு முழுமையாக ஒரு அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த விடயத்தை நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து  ஒரு ஆண்டுக்கும்  மேலாக பாராளுமன்றத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம். நினைவேற்றுக் குழுவில் இருந்து தாயாரித்த அரசியல் அமைப்பு நகலை  அதில் உள்ள சில அம்சங்கள் தொடர்பில் மாத்திரம் சிந்திப்போம் என தெரிவிக்கின்றனர். இந்த விடயங்களில் மக்கள் கருத்து இல்லாது மாற்றங்களை கொண்டுவர முடியும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நகர்வின் மூலம் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான கட்சிகளை ஏமாற்றும் விடயமாக போய்விடும். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட வேண்டும் என்ற காரணத்தை பிரதானப்படுத்தே புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. ஆகவே இந்த விடயத்தில் கண்துடைப்பான நகர்வுகளுக்கு நாம் இணக்கம் தெரிவிக்க முடியாது. 

மேலும்  புதிய தேர்தல் சீர்திருத்தம் என்று அறிமுகப்படுத்த முனைகின்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பிலும் எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. அவற்றிலும் ஒரு கருத்து ஒருமைப்பாடு ஏற்படுத்த வேண்டும். அந்த கருத்து ஒருமைப்பாடு இல்லாது ஒரு புதிய திருத்தத்தை திணிப்பதற்கு பெரிய கட்சிகள் மாத்திரம் முயற்சிப்பதிலும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. ஆகவே இந்த விடயங்களில் இணக்கப்பாடு எட்டவேண்டிய அவசியமும் அவசரமும் உள்ளது. அவ்வாறு இந்த விடயங்களில் இணக்கப்பாடு எட்ட முடியவில்லை என்றால் இவற்றை எல்லாம் ஒத்துக்கிவிட்டு  மற்றைய விடயங்களில் கவனம் செலுத்த நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் தேர்தல்களை பிட்போடாது  சரியான நேரத்தில் நடத்த வேண்டும். அதற்கான வழிவகைகைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உள்ளோராட்சி சபைத் தேர்தலை பழைய முறைமையில் அவசரமாக நடத்தி முடிப்பது தான் இப்போதைய தேவையாக உள்ளது. புதிய முறைமையை கொண்டுவருவதன் மூலம் இருக்கும் தொகையை 10 ஆயிரமாக மாற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விடயமாகும். ஆகவே இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22