யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குரு­நாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற பாட­சாலை கிரிக்கட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

இந்தப் போட்­டியில் துடுப்­பாட்­டத்தில் எவரும் குறிப்­பிட்டுக் கூறு­ம­ள­வுக்கு பிர­கா­சிக்­கா­த­போ­திலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்­க­ளான யதுசன் வசந்தன்இ கானா­மிர்தன் அரு­ளா­னந்தம் ஆகிய இரு­வரும் ஓர் இன்­னிங்ஸில் தலா 5 விக்கெட்­டுக்களைக் கைப்­பற்றி பந்­து­வீச்சில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

நத்தார் பண்­டி­கைக்கு முன்னர் கண்டி திரித்­துவ கல்­லூ­ரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்­றி கொண்­டி­ருந்த செய்ன் ஜோன்ஸ் அணி­யினால் இந்தப் போட்­டியில் சாதிக்க முடி­யாமல் பொனது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட தீர்­மா­னித்த புனித ஆனாள் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கட்­க­ளையும் இழந்து 153 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றது.

துடுப்­பாட்­டத்தில் ரந்­தீர ரன­சிங்க (40), நிப்புன் அஷோக் (34) ஆகிய இரு­வரும் அணிக்­கான அதி­க­பட்ச ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

ஜோன்ஸ் பந்­து­வீச்சில் யதுசன் வசந்தன் 5 ஓட்­ட­மற்ற ஓவர்கள் அடங்­க­லாக 14 ஓவர் கள் வீசி 26 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்கெட்டுக்­களைக் கைப்­பற்­றினார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன் ஜோன்ஸ் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கட்­க­ளையும்

இழந்து 204 ஓட்­டங்­களைப் பெற்­றது. ஹெரல்ட் லஸ்கி அம­ர­சேன (45), யதுசன் வசந்தன் (37), நிலோஜன் மகா­லிங்கம் (31) ஆகிய மூவரும் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்­தனர்.

பந்­து­வீச்சில் ரந்­தீரஇ வனித்த, பியுமல், நிப்புன் ஆகிய நால்­வரும் தலா 2 விக்­கெட்டுக்களைக் கைப்­பற்­றினர். புனித ஆனாள் இரண்­டா­வது இன்­னிங்ஸில் சகல விக்­கெட்டுக்­க­ளையும் இழந்து 204 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் ஆட்டம் முடி­வுக்கு வந்­தது.