12-ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்டி இந்­தி­யாவின் மேகா­லயா மற்றும் அசாம் மாநி­லங்­களில் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடக்­கி­றது.

இதில் 8 போட்­டிகள் மேகா­ல­யா­விலும், 15 போட்­டிகள் அசா­மிலும் நடை­பெறும் என்று முதலில் முடிவு செய்­யப்­பட்டு இருந்­தது. இதற்­கி­டையே, மைதா­னத்தில் போதிய வசதி இல்­லா­ததால் ஷில்­லாங்கில் (மேகா­லயா) நடத்த திட்­ட­மி­டப்­பட்ட பேட்­மிண்டன் போட்­டியை கௌஹாத்­திக்கு (அசாம்) மாற்ற திடீ­ரென முடிவு எடுக்­கப்­பட்­டது.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த மேகா­லயா மாநில ஒலிம்பிக் சங்கம் போட்­டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக மேகா­லயா அரசு முடிவு செய்து இருப்­ப­தா­கவும், இந்த விவ­கா­ரத்தில் இந்­திய ஒலிம்பிக் சங்கம் உட­ன­டி­யாக தலை­யிட்டு பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்­தது.

இந்த நிலையில் இந்த பிரச்சி­னையில் மத்­திய விளை­யாட்டுஅமைச்சர் சர்­பா­னந்தா சோனோ வால் தலை­யிட்டு, மேகா­லயா முத­ல­மைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இதில், முதலில் திட்­ட­மிட்­ட­படி பேட்­மிண்டன் போட்டியை ஷில்லாங்கில் (மேகாலயா) நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது.