மின்சார தாக்குதலுக்கு இலக்கான கணவனை காப்பாற்ற முற்பட்ட மனைவியும், கணவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.

 சுன்னாகம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த குணதாசன், மாக்ரெட் ஜோஜ் சுகந்தி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 இறைவனுக்கு சோடனை செய்வதற்காக மின் விளக்கு   அலங்காரம் செய்ய முற்பட்ட கணவன் மின் மானியில் ஆணி அடித்து கம்பி கட்டும் போது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து கணவனை காப்பாற்றும் முயற்சியில் மனைவி மாலை கட்டியிருந்தபடியே கணவனை பிடிக்க கம்பியையும் பிடித்த போது அவரும் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் சுன்னாகம் பகுதியில் பெரும் சோகத்தை 

ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்