இருபதுக்கு 20 தொடரையும் வென்றது நியூஸி. முதலிடத்தை இழந்தது இலங்கை 

Published By: Priyatharshan

11 Jan, 2016 | 10:12 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மிகவும் மோச­மா­னதாக முடிந்­துள்­ளது. நியூ­ஸி­யுடன் மோதிய அனைத்து தொடர்­க­ளையும் இழந்து, இருப­துக்கு 20 தர­வ­ரி­சையில் இரண்டு இடங்கள் சறுக்­க­லையும் சந்­தித்­துள்­ளது.

இலங்கை அணி நியூ­ஸி­லாந்தில் கடந்த ஒரு மாத­மாக 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் விளை­யா­டி­யது. டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்­கிலும், ஒருநாள் தொடரை 3-–1 எனவும் பறி­கொ­டுத்­தது.

இதைத் தொடர்ந்து நடந்த இரு­ப­துக்கு 20 தொட­ரிலும் இலங்கை அணிக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது. முதல் போட்­டியில் 3 ஓட்­டங்­களால் தோற்ற இலங்கை, நேற்று நடை­பெற்ற 2ஆவது இரு­ப­துக்கு 20 போட்­டி­யிலும் 9 விக்கெட்டுக்களால் தோற்றது.

நேற்று நடை­பெற்ற இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற நியூ­ஸி­லாந்து அணித் தலைவர், இலங்கை அணியை முதலில் விளை­யாட அழைத்தார்.

அதன்­படி கள­மி­றங்­கிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 142 ஓட்­டங்­க­ளையே பெற்­றது. அஞ்­சலோ மெத்­தியூஸ் ஒரு­வரே அதி­ர­டி­யாக விளையாடி 81 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். நியூ­ஸியின் எல்­லியாட் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

143 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளி­தான இலக்­குடன் கள­மி­றங்­கிய நியூஸி. 10 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை இழந்து 147 ஓட்­டங்­களைப் பெற்று 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

குப்தில் 19 பந்­து­களில் அரை சதத்தை கடந்து சாதனை படைத்தார். அவ­ரது சாத­னையை முன்ரோ 14 பந்துகளில் 50 ஓட்­டங்­களைத் தொட்டு முறியடித்தார்.

குப்தில் 63 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். முன்ரோ 14 பந்­து­களில் 50 ஓட்­டங்­களைப் பெற்றார். வில்­லி­யம்ஸன் 31 ஓட்­டங்­க­ளுடன் களத்தில் இருந்­தார். இந்த வெற்றி மூலம் நியூ­சி­லாந்து அணி 2–0 என்ற கணக்கில் தொடரை வென்­றது.

இந்தத் தோல்வியினால் இலங்கை அணி இரு­ப­துக்கு 20 தர­வ­ரி­சையில் தனது முதல் இடத்தை பறி­கொ­டுத்­துள்­ளது. 118 புள்­ளி­க­ளுடன் முதல் இடத்தில் இருந்த இலங்கை அணி தற்போது 3ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. தற்­போது முதல் இடத்தில் மேற்­கிந்­திய தீவுகள் அணியும், 2ஆவது இடத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவும் தலா 118 புள்ளிகளுடன் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07