ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் கம்பீர் மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

ஐ.பி.எல்.தொடரில் முதலாவது விக்கட்டுக்காக கம்பீர் மற்றும் கிரிஸ் லின் ஜோடி 184 ஓட்டங்களை  பகிர்ந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பில் டில்ஷான் மற்றும் கிரிஸ் கெயில் ஜோடி பகிர்ந்த 167 ஓட்டங்களே முதல் விக்கட்டுக்காக பகிர்ந்த அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கிரிஸ் லின் 91 ஓட்டங்களையும்,  கம்பீர் 76 ஓட்டங்களையும் ஆட்டமிக்காமல் பெற்றனர்.

நேற்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் 184 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய போதே குறித்த சாதனை படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.