ஸ்வீடன்: சன நெரிசலான பகுதிக்குள் வேகமாகப் புகுந்த ட்ரக் மோதி நால்வர் பலி!

Published By: Devika

08 Apr, 2017 | 11:23 AM
image

ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில், சன நெரிசலான பகுதியில் படு வேகமாகப் புகுந்த வாகனம் மோதி நான்கு பேர் பலியாகினர். மேலும் பதினைந்து பேர் படு காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தீவிரவாதச் செயலாக இருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

வார இறுதி நாளான நேற்று (7) வெள்ளியன்று, சன நெரிசலான சந்தைப் பகுதிக்குள் வேகமாக நுழைந்தது ஒரு பெரிய ட்ரக். வீதியின் இரு மருங்கிலும் வளைந்து வளைந்து ஓடிய அந்த ட்ரக், எதிர்ப்பட்டவர்களையெல்லாம் மோதியபடி சென்று ஒரு சிறப்பு அங்காடிக் கட்டிடத்தில் மோதி நின்றது. இதில், தள்ளுவண்டியில் வைத்து அழைத்து வரப்பட்ட குழந்தை ஒன்றும் அடக்கம்.

குறித்த ட்ரக் வண்டி பியர் உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. மர்ம நபர்கள் சிலர், பியர்களை வினியோகிக்க வந்த அந்த ட்ரக்கை கடத்தியே இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகத் தெரியவருகிறது. ட்ரக்கைக் கடத்தியவரைத் தடுக்க முயன்ற ட்ரக் சாரதியும் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு, சுற்று வட்டாரங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21