நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு கிம்புலபிட்டியவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.