இரு நாட்டுமீனவர்களின் நெடுநாளைய பிரச்சனைகளுக்கு தீர்வு குறித்து இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் நீரியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகின்றது. 

இக்கூட்டத்தில் இலங்கை வசமுள்ள 134 இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்சனையின்றி மீன்பிடிக்கவும் 1974 ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தவும் உறுதிசெய்யப்பட வேண்டும் இல்லையேல்  தமிழக மீனவர்கள் மாணவர்கள் பொது அமைப்புகள் மற்றும் திரையுலகத்துறையினருடன் ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் கச்சத்தீவை முற்றுகையிடுவோம் என இந்திய மீனவ அமைப்புகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.